சிரஞ்சீவியின் காட்ஃபாதர் படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்


சிரஞ்சீவியின் காட்ஃபாதர் படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்


மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது இனிய நண்பர் சல்மான் கானுடன் தனது வரவிருக்கும் திரைப்படமான காட்ஃபாதர் இல் திரை இடத்தைப் பகிர்ந்துக்கொள்ளவுள்ளார். இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி மற்றும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் காட் ஃபாதர்.

இந்த படமானது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த லூசிஃபர் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள திரைப்படமான லூசிஃபர் படத்தை காட்ஃபாதர் எனும் பெயரிலும், கோலிவுட்டில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தை போலா சங்கர் எனும் பெயரிலும் ரீமேக் செய்து நடித்து வருகிறார் சிரஞ்சீவி.

மேலும் படிக்க | அடேங்கப்பா..சமந்தாவோட ஒரு கவுன் இவ்ளோ விலையா?

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த படம் லூசிஃபர். இந்த படத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், டொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாறன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் கேமியோ ரோலில் பிருத்விராஜ் நடித்திருந்தார். 

இந்த நிலையில் தற்போது இந்த படத்தை இயக்குநர் மோகன் ராஜா தெலுங்கில் ரீமேக் செய்கிறார். மலையாளத்தில் மஞ்சிமா மோகன் நடித்த கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து வருகிறார. தற்போது இந்த படத்தில் பாலிவுட்டின் நடிகர் சல்மான் கான் நடிக்க உள்ளார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

இது தொடர்பாக நடிகர் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில், சல்மான் கானுக்கு பூங்கொத்து கொடுக்கும் போட்டோவை ஷேர் செய்து காட்ஃபாதர் படத்தில் சல்மான் கான் ஆன்போர்ட் ஆகியுள்ளதை அறிவித்துள்ளார். இவர்களின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

மேலும் படிக்க | இதுவரை பெண்களுக்கெதிரான குற்றங்களை வெளிக்காட்டிய திரைப்படங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Comments

Popular posts from this blog

Ulass 3 Colors Scrub Winter Boots Over The Knee Flat Heel Round Toe Buckle Fur Boots Barreled Snow Boots For Women Big Size 34

Black coffee cup with steam

சிறப்பு ரயில் திடீர் தடம் புரண்டு விபத்து!