காரணமே வேறயாம்! திடீரென இரவோடு இரவாக டெல்லி பறக்கும் ஆளுநர் ரவி! நடக்க போவது என்ன? 1522755418
காரணமே வேறயாம்! திடீரென இரவோடு இரவாக டெல்லி பறக்கும் ஆளுநர் ரவி! நடக்க போவது என்ன? சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி இன்று இரவு டெல்லி செல்கிறார். அவர் டெல்லி பயணத்திற்கு பின் வேறு சில முக்கிய காரணங்கள் இருப்பதாக ஆளுநர் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழ்நாடு ஆளுநர் ஆர் . என் ரவியை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் சந்தித்து பேசினார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையிலுள்ள சட்டமுன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். குறிப்பாக, மருத்துவ மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்டமுன்வடிவு, 2022-க்கு ஒப்புதல் வழங்கிட ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆளுநர் ரவி மொத்தம் 22 மசோதாக்கள் நிலுவையில் இருப்பதை குறிப்பிட்டு ஆளுநர் ரவியிடம் முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறார். இந்த நிலையில் ஆளுநர் ரவி இன்று இரவு டெல்லி பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தற்போது தேசிய அளவில் குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான...