ஒருவழியாக பீஸ்ட் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட நெல்சன்!
ஒருவழியாக பீஸ்ட் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட நெல்சன்! நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகிறது. நாள் நெருங்க நெருங்க ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது, இப்படத்திலிருந்து வெளியான பாடல்களையும், போஸ்டர்களை இணையத்தில் தெறிக்கவிட்டு பீஸ்ட் படத்திற்காக காத்திருக்கிறோம் என்று கூறி இணையத்தை பீஸ்ட் காட்சிகளால் இணையத்தை மூழ்கடித்து வருகின்றனர். இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தினாலும் படம் திரையரங்குகளில் எப்போது வெளியாகிறதோ அப்போது தான் ரசிகர்கள் ஓய்வார்கள். அந்த அளவிற்கு வெறித்தனமாக பல ரசிகர்களும் பீஸ்ட் படத்தை காண ஆவலாக உள்ளனர். மேலும் படிக்க | அவரும் இல்ல, இவரும் இல்ல: ‘விஜய்-66’ ஹீரோயின் இவங்கதானாம்! பீஸ்ட் பட வெளியீட்டிற்கு மறுநாள் 'கேஜிஎப்-2' படம் வெளியாகவுள்ளது. இந்த தகவல் வெளியானதில் இருந்தே விஜய் ரசிகர்களும், கேஜிஎப் ரசிகர்களும் இணையத்தில் குட்டி உலகப்போரையே நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் 'கேஜி...