சினிமா பாணியில் போலி ரைடு! அலேக்காக 5 பவுன் நகை மற்றும் ரூ.75 ஆயிரம் ரொக்கத்தை ஆட்டையை போட்டு சென்ற மர்ம நபர்கள்..2076642661
சினிமா பாணியில் போலி ரைடு! அலேக்காக 5 பவுன் நகை மற்றும் ரூ.75 ஆயிரம் ரொக்கத்தை ஆட்டையை போட்டு சென்ற மர்ம நபர்கள்.. கோவை சூலூர் கலங்கல் பாதையில் குருவம்மாள் நகர் பகுதியில் தாய் திலகம் மகன் கவியரசன் ஆகியோர் மளிகைக்கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். மேலும் கடையின் எதிரிலேயே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர். இதனிடையே நேற்று முன்தினம் கவியரசு மட்டும் கடையில் தனியாக இருந்துள்ளார். அப்போது மதியம் வெள்ளை நிற காரில் 4 பேர் வந்துள்ளனர். தாங்கள் போலீசார் என அறிமுகப்படுத்திக் கொண்ட அவர்கள் கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் வந்துள்ளது எனவும் கடையை சோதனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். காரில் ஒருவர் அமர்ந்திருந்த நிலையில் 3 பேர் கடைக்குள் சென்று சோதனையிட்டுள்ளனர். கடையில் செய்த சோதனையில் குட்கா ஏதும் கிடைக்காத நிலையில் உங்கள் வீட்டில் சோதனை செய்ய வேண்டும் எனக்கூறி எதிரில் உள்ள வீட்டிற்கு கவியரசனை அழைத்துச்சென்றுள்ளனர். அப்போது அவரிடமிருந்த செல்போனைப் பறித்து வைத்துக் கொண்டு வீடு முழுவதும் சோதனை செய்துள்ளனர். வீட்டிலும் எதுவும் கிடைக்காததால் கவியரசனைக் கா...