Posts

Showing posts with the label #Africa | #Shooting | #Dead

தென் ஆப்ரிக்காவில் மதுபானக் கூடம் ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் பலி1246831535

Image
தென் ஆப்ரிக்காவில் மதுபானக் கூடம் ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் பலி தென் ஆப்ரிக்காவின் காடெங் மாகாணத்தில் உள்ள ஜோஹன்னஸ்பர்க் மாநகரத்திற்கு உட்பட்ட பகுதி சொவெடோ. இங்குள்ள ஒரு மதுபானக் கூடத்திற்கு காலையில் சென்ற மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 15 பேர் உயிரிழந்துள்ளனர். மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் வெள்ளை நிற மினி பேருந்து மூலம் தப்பிச் சென்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்க வந்த போலீசார், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த மிகப் பெரிய துப்பாக்கிச் சூடு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் அதிக அளவில் குண்டுகள் சிதறிக்கிடப்பதால், துப்பாக்கிச் சூட்டில் பலர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதேபோல், தென் ஆப்ரிக்காவின் க்வாஜூலு-நாடல் மாகாணத்திலும் இதேபோன்று மதுக்கூடம் ஒன்றில் இன்று துப்பாக்கிச் சூடு நடந்துள்ளத...