ஆர்ட்டிக்கிள் 142-ஐ பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் பேரறிவாளன் விடுதலை!
ஆர்ட்டிக்கிள் 142-ஐ பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் பேரறிவாளன் விடுதலை! பேரறிவாளன் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். ``இந்த வழக்கில் ஆளுநர் முடிவெடுக்க தாமதப்படுத்தியது தவறு” என்று கருத்து தெரிவித்த நீதிமன்றம் தற்போது பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது. மேலும், ஆர்ட்டிகிள் 142 -ன் படி பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அதாவது 161-வது பிரிவில் ஆளுநர் முடிவெடுக்க தாமதப்படுத்தியதால், ஆர்ட்டிக்கிள் 142-ஐ பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைதான எழுவரில் ஒருவரான பேரறிவாளன், தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பல அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தது. அதாவது, இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு, ``பேரறிவாளனை விடுவிப்பதே வழக்கை முடித்துவைக்க ஒரே தீர்வு. வழக்கின் நேரத்தை மத்திய அரசு வீணடிக்கிறது. இந்த வழக்கில் ஆளுநருக