Posts

Showing posts with the label #WeatherForecast | #Todayweather | #todayraine

வங்க கடலில் உருவானது \'அசானி\' புயல் - மே 10ல் கரையைக் கடக்கிறது!

Image
வங்க கடலில் உருவானது \'அசானி\' புயல் - மே 10ல் கரையைக் கடக்கிறது! தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுவடைந்து இன்று புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.  அதன்படி, தென் கிழக்கு வங்க‌க் கடல் பகுதியில் “அசானி புயல்” உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் இந்த புயல், விசாகப்பட்டினத்தில் இருந்து 970 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டு உள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக உருமாறி வடமேற்கு திசையில் நகரக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளில் வரும் 10 ஆம் தேதி அசானி புயல்கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், ஒடிசா மற்றும் ஆந்திரா கரையோர பகுதி மக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் முன்னெச்சரிக்கையை தொடர...