ஒருவழியாக பீஸ்ட் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட நெல்சன்!


ஒருவழியாக பீஸ்ட் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட நெல்சன்!


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகிறது.  நாள் நெருங்க நெருங்க ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது, இப்படத்திலிருந்து வெளியான பாடல்களையும், போஸ்டர்களை இணையத்தில் தெறிக்கவிட்டு பீஸ்ட் படத்திற்காக காத்திருக்கிறோம் என்று கூறி இணையத்தை பீஸ்ட் காட்சிகளால் இணையத்தை மூழ்கடித்து வருகின்றனர்.  இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தினாலும் படம் திரையரங்குகளில் எப்போது வெளியாகிறதோ அப்போது தான் ரசிகர்கள் ஓய்வார்கள்.  அந்த அளவிற்கு வெறித்தனமாக பல ரசிகர்களும் பீஸ்ட் படத்தை காண ஆவலாக உள்ளனர்.

 

மேலும் படிக்க | அவரும் இல்ல, இவரும் இல்ல: ‘விஜய்-66’ ஹீரோயின் இவங்கதானாம்!

பீஸ்ட் பட வெளியீட்டிற்கு மறுநாள் 'கேஜிஎப்-2' படம் வெளியாகவுள்ளது.  இந்த தகவல் வெளியானதில் இருந்தே விஜய் ரசிகர்களும், கேஜிஎப் ரசிகர்களும் இணையத்தில் குட்டி உலகப்போரையே நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர்  'கேஜிஎப்-2' படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  ஆனால் பீஸ்ட் படத்தின் டீசரையோ அல்லது ட்ரைலரயோ படக்குழு இன்னும் வெளியிடவில்லை, இதனால் கவலையும், ஆத்திரமும் அடைந்த ரசிகர்கள் படத்தின் தயாரிப்பு குழுவை வசைபாட தொடங்கிவிட்டனர்.  வலிமை படத்தின் போது அஜித் ரசிகர்கள் எப்படி அப்டேட் வெளிவரவில்லை என்று கலவரம் செய்தார்களோ, அதைவிட பல மடங்கு அதிகமாக விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பில் இருந்து வந்தனர்.

 

ஆடியோ லான்ச் நடத்தப்படும் என்று காத்திருந்த நிலையில் அதுவம் நடக்காமல் போக, இப்படத்தின் டீசர் அல்லது டிரைலர் ஏதேனும் வெளியாகி நிம்மதியாக்கும் என்று நினைத்துக்கொண்டிருக்கையில் இதுவும் காலதாமதம் ஆனதால் பீஸ்ட் அப்டேட் என்று பலரும் புலம்ப ஆரம்பித்தனர்.  இந்நிலையில் இவர்களை குளிர்விக்கும் விதமாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது, அதாவது படத்தின் இயக்குனர் நெல்சன் அவரது ட்விட்டர் பக்கத்தில் 'நாளை' என்று பதிவிட்டுள்ளார்.  இந்த ஒற்றை வார்த்தையை பார்த்ததும் கோபத்தில் இருந்த ரசிகர்கள் மீண்டும் ஜாலியோ ஜிம்கானா மூடிற்கு சென்று விட்டனர்.  மேலும் நாளை படத்தின் டீசர் வெளியாகுமா இல்லை டிரைலர் வெளியாகுமா என்று ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

 

Comments

Popular posts from this blog

Moroccan Eggplant Salad Zaalouk