ஆர்ட்டிக்கிள் 142-ஐ பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் பேரறிவாளன் விடுதலை!
ஆர்ட்டிக்கிள் 142-ஐ பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் பேரறிவாளன் விடுதலை!
பேரறிவாளன்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். ``இந்த வழக்கில் ஆளுநர் முடிவெடுக்க தாமதப்படுத்தியது தவறு” என்று கருத்து தெரிவித்த நீதிமன்றம் தற்போது பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது.
மேலும், ஆர்ட்டிகிள் 142 -ன் படி பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அதாவது 161-வது பிரிவில் ஆளுநர் முடிவெடுக்க தாமதப்படுத்தியதால், ஆர்ட்டிக்கிள் 142-ஐ பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைதான எழுவரில் ஒருவரான பேரறிவாளன், தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பல அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தது. அதாவது, இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு, ``பேரறிவாளனை விடுவிப்பதே வழக்கை முடித்துவைக்க ஒரே தீர்வு. வழக்கின் நேரத்தை மத்திய அரசு வீணடிக்கிறது. இந்த வழக்கில் ஆளுநருக்காக மத்திய அரசு வாதிடுவது ஏன்? எந்த விதியின் கீழ் மாநில அரசின் ஆளுநருக்காக மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடுகிறீர்கள்? கிரிமினல் வழக்குதானே, கிரிமினல் வழக்கில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லையா?
கருணை விவகாரத்தில் மாநில அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர்தானே ஆளுநர்" என மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. மேலும் இந்த வழக்கில், `உச்ச நீதிமன்றம் தனது அதிகாரத்தினால் பேரறிவாளனை விடுவிக்க வேண்டும்' என பேரறிவாளன் தரப்பு கூறியிருந்தது. கடந்த 11-ம் தேதியோடு அனைத்து வாதங்கள் முடிவடைந்தன. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்னதாக அறிவித்திருந்தபடியே, பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு குறித்த விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை நடைபெற்றது.
இன்று தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், ``இந்த வழக்கில் ஆளுநர் முடிவெடுக்க தாமதப்படுத்தியது தவறு” என்று கூறியதுடன் அவரை விடுதலை செய்தும் உத்தரவிட்டது.
Comments
Post a Comment