மன உளைச்சலால் சென்னை கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சி! காரணம் ஆசிரியர்!178926545


மன உளைச்சலால் சென்னை கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சி! காரணம் ஆசிரியர்!


கால்நடை மருத்துவக் கல்லூரி

சென்னை வேப்பேரியில் கால்நடை மருத்துவக் கல்லூரி அமைந்து உள்ளது. இங்குக் கல்லூரி விடுதியில் தங்கி, இரண்டாம் ஆண்டு படித்து வந்த இரு மாணவிகள் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளனர். இருவரின் செயல்பாடுகள் காரணமாக இவர்கள் உடன் சக மாணவ- மாணவிகளும் கல்லூரி ஆசிரியர்களும் பேசாமல் ஒதுக்கி வைத்தாக என்று கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலால் இருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

 

தற்கொலை முயற்சி

ஒரு கட்டத்தில் இதைத் தாங்க முடியாமல் மருத்துவக் கல்லூரி லேப்பில இருந்த மெர்குரிக் சல்பைடை சாப்பிட்டு இருவரும் தற்கொலைக்கு முயன்று உள்ளனர். இதை விடுதியில் இருந்த மற்றொரு மாணவி பார்த்துள்ளார். இதையடுத்து மாத்திரை உண்ட இரு மாணவிகளும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைக்கு விரைந்து சென்ற போலீசார், இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

Comments

Popular posts from this blog

Moroccan Eggplant Salad Zaalouk