கடந்த 5 ஆண்டுகளாக அதிக வரி செலுத்துபவர் என்ற பெருமையை தக்கவைத்த அக்சய் குமார்1108940688


கடந்த 5 ஆண்டுகளாக அதிக வரி செலுத்துபவர் என்ற பெருமையை தக்கவைத்த அக்சய் குமார்


பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமார், பொழுதுப்போக்குத் துறையில் அதிக வரி செலுத்துபவர் என்ற பெருமையை மீண்டும் பெற்றுள்ளார். இதற்கான பாராட்டுச் சான்றிதழை வருமான வரித்துறை அவருக்கு வழங்கியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக அதிக வரி செலுத்துபவர் என்ற பெருமையை அக்சய் குமார் தக்கவைத்துள்ளார். தற்போது இங்கிலாந்தில் படப்பிடிப்பில் உள்ளதால், வருமான வரித்துறையின் பாராட்டு சான்றிதழை அவரது தரப்பில் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதே போன்று தமிழக - புதுச்சேரி மண்டலத்தில் அதிக வருமான வரி செலுத்தியதற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்ட விருதை அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். 

Comments

Popular posts from this blog

Moroccan Eggplant Salad Zaalouk