1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!2101281598
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 27ம் தேதி பள்ளிகள் திறப்பு!
கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (ஜூன் 27) முதல் பள்ளிகள் வழக்கம் போல மீண்டும் திறக்கப்பட உள்ளதாக மாநில அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
இந்தியாவில் கொரோனா பரவல், கோடை விடுமுறை உள்ளிட்ட காரணங்களால் மூடப்பட்ட பள்ளிகள் மீண்டும் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மேற்கு வங்கத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை விடுமுறைக்கு பிறகு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதாவது ஜூன் 27 முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளையும் மீண்டும் திறக்குமாறு மாநில அரசு வெள்ளிக்கிழமை அறிவிப்பை வெளியிட்டது. மேலும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே அம்மாநில அரசு வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு கோடை விடுமுறையை மேலும் 11 நாட்கள் நீட்டித்து அரசு உத்தரவிட்டது. அந்த வகையில் மேற்கு வங்க பள்ளிகளுக்கு மே 2 முதல் ஜூன் 15 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது, பின்னர் ஜூன் 26 வரை நீட்டிக்கப்பட்டது. பள்ளி வளாகங்களை சுத்தம் செய்து தூய்மையாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலுக்கு மத்தியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை உறுதி செய்யுமாறு மேற்கு வங்க பள்ளிக் கல்வித்துறை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அனைத்து ஆசிரியர்களும், பிற ஊழியர்களும் 2 நாட்களுக்கு முன்னதாகவே வருமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும் நாளை முதல் விடுதிகளை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் சில தனியார் பள்ளிகள் பாடத்திட்டத்தை முடிக்கவும், நீட்டிக்கப்பட்ட கோடை விடுமுறையை ஈடு செய்யவும் ஆன்லைன் வகுப்புகளை எடுக்கத் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment