IPL 2022: ‘பிளே ஆஃப் சுற்றில் அதிரடி மாற்றம்’…மொத்தம் 5 அணிகள் பங்கேற்க வாய்ப்பு: பிசிசிஐ ஆலோசனை!
IPL 2022: ‘பிளே ஆஃப் சுற்றில் அதிரடி மாற்றம்’…மொத்தம் 5 அணிகள் பங்கேற்க வாய்ப்பு: பிசிசிஐ ஆலோசனை!
வெளியேற்றம்:
இந்த 15ஆவது சீசனில் சாம்பியன் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் படுமோசமாக சொதப்பி, தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றன. மும்பை இந்தியன்ஸ் தொடர்ந்து 8 போட்டிகளிலும் தோற்று, பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. சிஎஸ்கே 8 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டும் பதிவுசெய்துள்ளது. அடுத்த 6 போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே வாய்ப்பு இருக்கும்.
இந்த இரண்டு அணிகளுமே ஐபிஎலில் முன்னணி அணிகளாக இருக்கின்றன. ரசிகர்களும் மிகவும் அதிகம். இந்நிலையில், 15ஆவது சீசனில் இரண்டு அணிகளும் பிளே ஆஃப் வாய்ப்பை இழக்கும் நிலைக்கு சென்றுவிட்டதால், ரசிகர்கள் அவ்வளவாக போட்டியை காண்பதில்லை. இதனால் ஐபிஎல் நிர்வாகத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை உடனே சரிசெய்ய வேண்டும் என்ற எண்ணிய நிர்வாகம், நேற்று இரவு பிசிசிஐ நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது.
நிர்வாகிகள் கூட்டம்:
நேற்று இரவு நடைபெற்ற அந்த கூட்டத்தில், இதுகுறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது பேசிய ஒரு நிர்வாகி, “முன்பு மொத்தம் 8 அணிகள் இருந்ததால், பாதிக்கு பாதி நான்கு அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு கொடுத்தோம். தற்போது 10 அணிகள்வரை வந்துவிட்டது. இதனால் பாதிக்கு பாதி 5 அணிகளுக்கு பிளே வாய்ப்பு கொடுக்க வேண்டும். அதாவது 4,5ஆவது இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு கூடுதலாக ஒரு நாக்அவுட் போட்டி நடத்தி, அதில் வெற்றிபெறும் அணியை வைத்து வழக்கமாக பிளே ஆஃப் சுற்றை நடத்துவதுபோல் நடத்தினால், நன்றாக இருக்கும்” எனக் கூறியிருக்கிறார்.
மேலும் பேசிய அவர், “அப்படி செய்தால் விறுவிறுப்பு கூடும். வெளியேறி சாம்பியன் அணிகளுக்கும் பிளே ஆஃப் வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு இருக்கும் என்பதால், மீண்டும் ஐபிஎல் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். இல்லையென்றால், நிச்சயம் ஐபிஎலுக்கு பெரும் ஆபத்து ஏற்படும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு நிர்வாகிகள் பலரும் ஆதரவு தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து ஐபிஎல் தலைமை நிர்வாகி ப்ரிஜேஷ் படேல், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் இறுதி முடிவினை எடுப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
Comments
Post a Comment