பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த பேருந்து.. 35 பயணிகளை பலிகொண்ட கோர விபத்து! ஈஸ்டர் விடுமுறையில் சோகம்
பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த பேருந்து.. 35 பயணிகளை பலிகொண்ட கோர விபத்து! ஈஸ்டர் விடுமுறையில் சோகம்
ஜிம்பாப்வே விபத்து
ஜிம்பாப்வேயின் சாலைகள் ஈஸ்டர் காலத்தில் மிகவும் பிஸியாக இருக்கும், பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் வாழும் இந்த நாட்டில் தற்போது விடுமுறைக் காலம் ஆகும். இது எடுத்து ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுவதற்காக ஏராளமான மக்கள் மலைப்பகுதிகளில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
பக்தர்கள் பலி
இந்நிலையில் ஜிம்பாப்வே நாட்டில் அதிக அளவு பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 35 ஈஸ்டர் பண்டிகைக்காக பயணம் மேற்கொண்ட பக்தர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிம்பாப்வேயின் கிழக்குப் பகுதியில் மலைப்பாங்கான பகுதியில் கிறிஸ்துவ புனிதப் பயணிகளை ஏற்றிச் சென்று பேருந்து ஒன்று கொண்டிருந்தது.
பள்ளத்தில் கவிழ்ந்தது
பேருந்தின் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக 106 பயணிகளுடன் அந்தப் பேருந்து சென்றுகொண்டிருந்தது என்றும் கூறப்படுகிறது. மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையிலிருந்து நிலைதடுமாறி மிக ஆழமான பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது. இதில் 35 பயணிகள் உயிரிழந்தனா்.
மீட்பு பணிகள் தீவிரம்
மோசமான சாலைகளைக் கொண்டுள்ள ஜிம்பாப்வேயில், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு ஓட்டுநா்கள் அதிவேகமாக பேருந்துகளைச் செலுத்துவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகக் கூறப்படும் நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Comments
Post a Comment