கீவின் கிழக்குப் பகுதியை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளதாக பிரிட்டன் தகவல்.!
கீவின் கிழக்குப் பகுதியை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளதாக பிரிட்டன் தகவல்.!
உக்ரைன் தலைநகரான கீவின் கிழக்குப் பகுதியை அந்நாட்டு ராணுவம் மீட்டுள்ளதாகவும், அதனை கைப்பற்ற முயன்ற ரஷ்யப் படைகள் பின்வாங்குவதாகவும் பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தெரிவித்த பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சகம், உக்ரைன் ராணுவம் கீவ் நகருக்கு அருகே உறுதியாக நிலைகொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், உக்ரைனின் எதிர்த்தாக்குதல்களால் ரஷ்யப் படைகள் பின்வாங்குவதாகவும், கீவ் நகருக்கு கிழக்கே 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளை உக்ரைன் மீட்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்ய படைகள் கீவ் நகரை விட்டு மேலும் விலகிச்செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் பிரிட்டன் தெரிவித்துள்ளது. உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள மைகோலைவ் நகரை கைப்பற்றும் ரஷ்யாவின் முயற்சி, தளவாடங்கள் கொண்டு செல்வதில் உள்ள பிரச்சனை மற்றும் எதிர்தாக்குதலால் தாமதடைவதாக கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment